
வரலாற்றில் இன்று – 13.11.2021 : நவம்பர் 13 கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.
வரலாற்றில் இன்று – 13.11.2021 : நிகழ்வுகள்
1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1851 – வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
1918 – ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.
1950 – வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.
1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.
1970 – போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).
1971 – ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.
1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.
1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.
1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.
1995 – சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்று – 13.11.2021 : பிறப்புக்கள்
354 – ஹிப்போவின் அகஸ்டீன், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 430)
1934 – கமால் கமலேஸ்வரன், மேற்கத்திய இசைக் கலைஞர்
1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
1969 – அயான் கேர்சி அலி, சோமாலியப் பெண்ணியவாதி
1979 – ரான் ஆர்டெஸ்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
வரலாற்றில் இன்று – 13.11.2021 : இறப்புகள்
1989 – ரோகண விஜேவீர, இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (பி. 1943)
2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





