7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனிரோஸ். இவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு சிங்கம்புலி, மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். கடைசியாக 2014ம் ஆண்டு காத்தவராயன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சைக்கோ திரில்லர் கதையான இதில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாகவும், ஹனிரோஸ் பத்திரிகை நிருபராகவும், ஜெய் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்திருக்கிறார்கள். பத்ரி இயக்கி உள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply