புத்தளம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஜயபிம பகுதியில், அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் புத்தளம் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது, தூக்கிலிட்டவாறு அலுகிய நிலையில் பெண்ணொருவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பகுதிக்குச் சென்ற உதவி நீதவான் மொஹமட் இக்பால் பெண்ணின் சடலத்தை பார்வையிட்டார்.
உயிரிழந்தவர் மாதம்பை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகர் ஒருவரின் மனைவியாக இருக்கலாமென புத்தளம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பெண், மூன்று கிழமைகளுக்கு முன்னர் வீட்டிற்கு வாடகைக்கு வந்ததாகவும் இந்நிலையில்,நபர் ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் பொலிஸார் விசாரணைகளின் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பெண்ணோடு தொடர்பிலிருந்தவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உதவி நீதவான் தெரிவித்துள்ளார்.
தற்போது சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






