வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபரை, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






