கசப்புக் குளிசைக்கு இனிப்புத் தடவல்

சிறிதரன் எம்.பி
“ஒப்பரேஷன் சக்ஸஸ்; ஆள் தப்பவில்லை.” இதுதான் இந்த பட்ஜட்டின் நிலை. அபிவிருத்தி தொடர்பாக எதுவுமில்லை. சுருங்கச் சொன்னால் ஒரு அரசியல் பட்ஜெட் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். 

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்; நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். மூலோபாயங்கள் இல்லாமல் இருக்கிறது. ஒதுக்கப்பட்ட நிதிகளை எங்கிருந்து பெறப்போகிறார்களோ தெரியாது.
ஏற்கனவே, கடனில் வட்டி கட்டுவதற்கு திண்டாடும் நிலையில்,எப்படி சமாளிப்பார்களோ நான் அறியேன். 

இனவாத செயற்பாடுகளால் எதுவுமே சாத்தியப்பட முடியாத நிலையே இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கும் தயங்குகிறார்கள். இனவாதம் தான் காரணம். 

ஆகவே, இந்த பட்ஜட் கசப்புக் குளிசைக்கு இனிப்புத் தடவியுள்ளது போன்றுதான் இருக்கின்றதென்றார் சிறிதரன் எம்.பி.

Leave a Reply