நிதி ஒதுக்கீட்டில்மதங்களுக்கு பாரபட்சம்

சித்தார்த்தன் எம்.பி

நிதி ஒதுக்கீட்டில் மதங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பௌத்த மதத்திற்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது போல் ஏனைய மதங்களுக்கு நிதி ஒதுக்கியிருக்கலாமென புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறினார். 

பட்ஜட் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும்,உறவுகளை பிரிந்து தவிப்போரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். நிதி ஒதுக்கீடு மாத்திரம் அந்த பிரச்சினையைத் தீர்க்காது. 
இந்த பட்ஜட்டில் மக்களினுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ற நிவாரணம் பட்ஜட்டில் இல்லை. 

எம்.பி மாருக்கான நிதி ஒதுக்கீடு 15மில்லியன் ரூபாவாக அதிகரித்திருப்பது ஓரளவு நல்ல விடயம். எம்.பி மாருக்கான ஓய்வூதிய வயதெல்லை 10 வருடங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதனை எப்படி நடைமுறைப்படுத்துவார்களோ தெரியாது என்றும் சித்தார்த்தன் எம்.பி கூறினார்.

Leave a Reply