எதுவுமேயில்லை

ஹர்ஷ டி சில்வா எம்.பி

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் வாழ்க்கைச் செலவைக் குறைக்க எந்த ஏற்பாடுகளும் இல்லை. வெறும் அரசியல் இலக்கோடு இந்த பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

பட்ஜட் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீணடிக்கப்பட்டுள்ளதோடு ஏமாற்றப்பட்டுள்ளனர். 

நிதி மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு பற்றாக்குறையின் முக்கியக் கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை. 

முதலீடுகள், ஏற்றுமதிகள், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்களில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லையெனவும் கூறினார்.

Leave a Reply