பட்ஜெட்டில் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை! எரான் விக்கிரமரத்ன

வரவு – செலவுத் திட்டத்தில் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கு வரவு – செலவுத் திட்டம் தவறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஏற்றுமதி அதிகரித்தால் மாத்திரமே அந்நியச் செலாவணி நாட்டிற்குள் வரும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு, ஏற்றுமதியாளர்களை வலுப்படுத்த வேண்டிய விடயங்கள் எவையும் பட்ஜெட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆசிரியர் – அதிபர் சம்பள நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.

இதேவேளை, ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதா? என உறுதியாகத் தெரிவிக்க முடியாது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply