வசந்த முதலிகே தொடர்பான விசாரணைகள் CID யிடம்!

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு 72 மணித்தியால தடுப்புக்காவலில் உள்ள  வசந்த முதலிகே  உள்ளிட்ட மூவர்  தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , தேசத்துரோக  சதி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினருக்கு  இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply