இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு!

இளைஞர்களை தொழில் வழங்குநர்களாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயிகள் உருவாக்கப்படுவார்கள் எனவும், இறப்பர் சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும், இறப்பர் சார்ந்த உற்பத்தி தொழிலை ஊக்குவிக்கவும் முன்மொழிவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் சேதன பசளை உற்பத்தி திறனை அதிகரிப்பது கிராமிய அளவில் மேற்கொள்ளப்படும் எனவும், புகையிரத திணைக்களத்தால் திறம்பட பயன்படுத்தப்படாத காணிகளை கலப்பு அபிவிருத்திக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave a Reply