தொற்று – 723், சாவு 23, ஒரே நேரத்தில் அதிகரிக்கிறது!

இலங்கையில் நேற்று 723 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 48 ஆயிரத்து 784 ஆக எகிறியுள்ளது.
அதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 333 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 23 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட சாவுகளில் 11 ஆண்களும், 12 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 21 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

Leave a Reply