தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடி வரையும் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டுமே தவிர நிதி தேவையில்லை! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்






