நாட்டில் கொரோனா தொற்றால் 22 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை13,972 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 381 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,503 ஆக அதிகரித்துள்ளது.
மடுவில் பாடசாலை மாணவர்கள் மீது மது போதை கும்பலால் கொலை வெறி தாக்குதல்!






