பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமுகமளிக்குமாறு கிளிநொச்சியின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு 4ஆம் மாடியிலும், கிளிநொச்சியிலும் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்து நீண்டநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில், பச்சிலைப்பள்ளி சபையின் தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

குண்டு வைத்து தகர்க்கப்படவுள்ள மன்னாரில் உள்ள நீர்த்தாங்கி

Leave a Reply