கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தில் மோதி விபத்து: ஒருவர் பலி: இருவர் காயம்!

புத்தளம், கருவலகஸ்வௌ பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

வென்னப்புவ, லுணுவில, ரோஸ் மரியவத்தையைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் 9 வயது பேரனும், மருமகனும் காயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து வென்னப்புவ, லுணுவில பகுதியை நோக்கி மூவர் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த குறித்த வேன் வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுதொடர்பில் கருவலகஸ்வௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அராலியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா!

Leave a Reply