சீரற்ற வானிலை – 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கேகாலை, குருணாகல், இரத்தினப்புரி, களுத்துறை, கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களும் மண்சரிவு அபாயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply