Today Rasi Palan 14th November 2021 | இன்றைய ராசிபலன்

Today Rasi Palan 14th November 2021 | இன்றைய ராசிபலன் : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்: சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள் பெற்றோரின் ஆதரவு பெருகும் நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள் .வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கன்னி: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்: பணவரவு திருப்திகரமாக அமையும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

தனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply