பள்ளி மாணவிகளுக்கு முத்தம்: இசை ஆசிரியர் கைது!

டிக்வெல்ல அரச பாடசாலையில் பாடமாக இசை கற்பிக்கும் ஆசிரியர், தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இசை வகுப்புகளுக்குச் சென்ற மூன்று சிறுமிகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, அவர்களின் தகவலின் பேரில் போலீசார் விசாரணைகளை தொடங்கினர்.

14 மற்றும் 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகள் மருத்துவப் பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ.வுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

38 வயதான சந்தேக நபர் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply