வெளிநாடு செல்லவுள்ள இளைஞன், யுவதிகளுக்கு மொடோனா தடுப்பூசி

அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி உத்தியோகஸ்தர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அக்குறணை பிரதேச தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீனின் வேண்டுகோளின் பிரகாரம் வெளிநாடு செல்லவுள்ள இளைஞர், யுவதிகளுக்கு மொடோனா தடுப்பூசிகள் ஏற்றும் நிகழ்வு அக்குறணை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கண்டி பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்தில் உள்ள அக்குறணை பிரதேச சபை கேட்போர் கூடம் கெலிஓய ஜனரஞ்சனாராமய குண்டசாலை சுகாதார வைத்திய அலுவலகம், கண்டி ஈ. எல். சேனநாயக சிறுவர் நூலக கேட்போர் கூடம் போன்ற இடங்களில் 18 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply