கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வலயங்களும் இடையிலான இடமாற்றம்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு வலயங்களுக்கிடையிலான வருடாந்த இடமாற்றம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாகாண கல்வித் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்
ந. புள்ளநாயகம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஒரு வலயத்தில் இருந்து இன்னுமொரு வலயத்துக்கு தமது விருப்பத்தின் பேரில் இடமாற்றம் பெற விரும்புகின்ற கிழக்கு மாகாண அரச சேவையில் சேவையாற்றி வரும் இலங்கை ஆசிரியர் சேவை சேர்ந்த உத்தியோகத்தர்கள், குறித்த ஒரு பாடசாலையில் குறைந்தது ஐந்து வருடங்கள் சேவையாற்றிய இருப்பின் அது வருடாந்த இடமாற்றத்திற்கான தகுதியாக கருதப்படும்.

இது தொடர்பிலான கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 2007/ 20 தேசிய இடமாற்ற கொள்கை என்பவற்றை தழுவியதாகவும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஆசிரிய இடமாற்ற கொள்கைக்கு அமைவாகவும் இவ்விடம் மேற்கொள்ளப்பட இருப்பதனால், வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இடமாற்ற விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வலய கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply