வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தை விரைவில் திறக்கப்படாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நிதியமைச்சின் செயலாளர்,
தற்போது வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை இருப்பதாக தாம் கருதவில்லை.
மேலும், ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு வாகன இறக்குமதிக்கான அனுமதி விரைவில் திறக்கப்படாது.
கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்க நடவடிக்கை!






