வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் 17 பேர் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த 47 பேரில் 5 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பிலிருந்தோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.






