வீடொன்றுக்கு முன்பாக நின்றுக் கொண்டிருந்த நபர் மீது தாக்குதல்!

கொழும்பு – மடபாத்த பொல்ஹேன பிரதேசத்தில், வீடொன்றுக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த நபரொருவர் மீது , கூரிய ஆயுதங்களால் சரமாரியான தாக்குதலை மேற்கொண்ட இருவர் தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில், குறித்த நபரின் இடது கையின் மணிக்கட்டுப்பகுதி இரண்டாக வெட்டப்பட்டுள்ளது.

குறித்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 42 வயது நபரே படுகாயமடைந்துள்ளார்.

சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் வந்த இருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த இருவரும் கொலமுன்ன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply