மன்னாரில், போர்க்காலத்தில் புகைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவர்கள்; கைதுசெய்யப்பட்டனர்.
கேகாலையின் ஹெட்டிமுல்ல, கொட்டியாக்கும்புர, களுத்துறையின் பாணந்துறை, பதுளையின் பொரலந்த மற்றும் ஹெல்பே ஆகிய இடங்களைச் சேர்ந்த, 26 தொடக்கம் 60 வயதுகளைக் கொண்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த 6 பேரும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சிற்றூந்து, மின்பிறப்பாக்கி மற்றும் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் இன்று மன்னார் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இது ஒரு தோல்வியடைந்த வரவு செலவுத் திட்டம்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்






