நிர்ணய விலையை ஏற்க மறுக்கும் முட்டை உற்பத்தியாளர்கள்; அமைச்சருடன் இன்று சந்திப்பு

முட்டைக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை முட்டை ஒன்றுக்கு 43 ரூபா எனவும் சிவப்பு முட்டை ஒன்றுக்கு 45 ரூபா எனவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எனினும், முட்டைக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை சிறந்த விடயமல்ல என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டு, செலவுகளை ஈடுசெய்யக் கூடிய வகையில் விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த சுற்றிவளைப்புக்கள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply