IMF பரிந்துரைகளுக்கமைய பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும்! – பிரதமர் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் பின்னர் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கமைய பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த வாரம் நாட்டிற்கு பிரவேசிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்நாட்டு ரீதியாக பணவீக்கத்தில் ஏற்படுகின்ற தாக்கத்தினை குறைப்பதற்காக எதிர்வரும் காலங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ளலாம் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி சுஜிதா ஜெகஜீவன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply