வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த கோரி பொகவந்தலாவவில் ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா, நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ கெம்பியன் வரையிலான பிரதான வீதியின் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துமாறு கோரியும், குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் கடந்த வாரங்களில் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொகவந்தலாவ டின்சின் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

16 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டதாக குறித்த வீதியின் அபிவிருத்தி பணிகள் கடந்த மூன்று வருடகாலமாக முன்னெடுத்து வருகின்றபோதிலும் அபிவிருத்தி பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியினை மறித்து முன்னெடுக்கப்பட்டதோடு, பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் அவதியில், வீதியின் அபிவிருத்தியை இடைநிறுத்த வழங்கப்பட்ட தரகு தொகை எவ்வளவு, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியை விரைவாக சீர் திருத்து போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஹட்டன் பொகவந்தலாவ பேருந்து சாரதிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் டின்சின் நகர வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

பொகவந்தலாவ, ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து, ஆர்ப்பாட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply