பெரமுனவின் தீர்மானத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை! டலஸ் அதிரடி

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும 10 தலைமையிலான பேர் கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்னும் தீர்மானிக்கவில்லை.

எவ்வாறாயினும் தாம் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களைக் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்களின் பங்கேற்புடன் எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி தெரிவு மீதான வாக்கெடுப்பின் போதும் இவ்வாறானதொரு நடைமுறையே பின்பற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா மேலும் தெரிவித்தார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் 22 ஆவது திருத்ததிற்கு எதிராக ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply