மே – ஜூலை 9′ வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 பேர் கைது!

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், அலரி மாளிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிக்கு ஒருவர் உட்பட் 8 ஆண்களும், பெண்ணொருவரும், அடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்குள் பிரவேசித்து அங்கிருந்த பித்தளை அலங்காரப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் ராஜகிரிய – பண்டாரநாயக்கபுர பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

60 வயதுடைய குறித்த நபரிடம் இருந்து 9 பித்தளை அலங்கார பொருள் மற்றும் பெரிய பயணப் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி செயலகத்தக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் உள்ளிட்ட இருவரை கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட 24 வயதான பிக்கு, பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருவதுடன், மற்றைய சந்தேக நபர் ஓபநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

அத்துடன், கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை நுகேகொட வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

Leave a Reply