
கொழும்பு, ஓக 22
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற கட்டட வளாகத்திற்குள் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜயவர்தனபுர பொலிஸ் நிலைய விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





