
சிங்கப்பூரில் நீண்ட காலமாக பாரிய பிரச்சனையாக இருந்து வந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் சட்ட சிக்கல் தற்போது முடிவிற்கு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நேற்றைய தினம் தொலைக் காட்சியில் தோன்றிய சிங்கப்பூர் பிரதமர் “லீ சியென் லூங்” மேற்படி சட்ட பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மேலும் பிரதமர் தெரிவிக்கும் போது, “சிங்கப்பூரில் நீண்ட காலமாக காணப்பட்டு வந்த பிரச்சனைக்கு தற்போது தீர்வு எட்டப்பட்டு இருக்கின்றது.
ஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் அங்கரிக்க முடியாது மற்றும் அவர்களுக்கிடையிலான திருமணத்தை ஏற்க முடியாது என்ற இருந்த சட்டத்தை தற்போது சிங்கப்பூர் அரசு உத்தியோபூர்வமாக ரத்து செய்கின்றது.
அத்துடன் மேற்படி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான பூரண சுதந்திரத்தை வழங்கும் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது” என பிரதமர் தெரிவித்துள்ளமையானது சிங்கப்பூர் மட்டுமல்லாது உலகளவில் தமது உரிமைகளுக்காக போராடி வருகின்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.





