தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆபத்து நிறைந்த நிலையில் மக்கள் பயணம் தொடர்கிறது!

நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்து வருவதால் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மஸ்கெலியா நல்லதண்ணி வீதியில் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் அரச பேருந்துகள் மோகினி எல்ல பகுதியில் நிறுத்த படுவதால் அந்த இடத்தில் இருந்து பயணிகள் இரங்கி செல்லும் வழி மிகவும் ஆபத்தானது.

அத்துடன் பயணிகள் பாடசாலை மாணவர்கள் லக்சபான தோட்ட வாழமலை வழியாக தற்போது பயணம் செய்வதால் அவ்வீதி கனத்த மழை காரணமாக சகதி நிறைந்த நிலையில் உள்ளது.இதனால் வாகனங்கள் போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை என சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள மக்கள், பயணிகள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், பாதுகாப்பு பிரிவினர் மிகவும் சிரமபட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply