ரணில் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது- ஐ.தே.க பெருமிதம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்ட இலக்குகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே ஜனாதிபதி நாட்டைக் கைப்பற்றியதாகத் தெரிவித்த திரு.விஜயவர்தன, பழைய எரிபொருள் வரிசைகள் மற்றும் எரிவாயு வரிசைகள் நீங்கி நாடு வழமைக்குத் திரும்புவதாகக் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டைக் கைப்பற்றி பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணுமாறு பல கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தும் எவரும் பதிலளிக்காததால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கைப்பற்றியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

இந்தியாவுடன் கலந்துரையாடி விவசாயிகளுக்கான உரங்களை வழங்க திரு ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவன் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply