
22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேகா அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர, சட்டத்தரணி நுவன் பல்லந்துடவ, திஸ்ஸ பண்டார ரத்நாயக்க, எச்.டி.ஜே.குலதுங்க, பீ.பி.தஹநாயக்க ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்ததுடன், சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தற்போதைய அரசியலமைப்புக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய “அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலம்” கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்ற கோட்பாடு புத்தகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய மனுதாரர்கள், அதன் சில சரத்துக்கள் தற்போதைய அரசியலமைப்பின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக மேலும் கூறுகின்றனர்.
பிற செய்திகள்




