
கொழும்பு, ஓக 22
காலி முகத்திடலுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பெண்மணி கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளார். ஆகஸ்ட் 2 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் குடிவரவு அதிகாரிகள் குழுவொன்றை அணுகிய பிரேசருக்கு அவரது பயண ஆவணங்களை விசாரணைக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் அதன் தலைமை அலுவலகத்திற்கு விசாரணை நடத்த ஏழு நாட்களுக்குள் தெரிவிக்குமாறும் அவருக்கு அறிவிக்கப்பட்டது என்றார்.




