ஜப்பான் பிரதமருக்கு கொரோனாத் தொற்று

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனாக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனாத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply