கடந்த ஆண்டு மக்களால் நுகரப்பட்ட பால்மா தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கடந்த வருடம் 83,024 மெற்றிக் தொன் முழு பால் மா இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இறக்குமதி செய்யப்பட்ட பால் மா கையிருப்பின் பெறுமதி 59,175 மில்லியன் ரூபாவாகும்.

நாட்டின் வருடாந்த உள்நாட்டு பால் உற்பத்தியானது, மொத்த பால் தேவையை விட மிகவும் குறைவாக உள்ளதால், பற்றாக்குறையை சமாளிக்க செறிவூட்டப்பட்ட பால் மாவை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கை 1.1 மில்லியன் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 0.3 மில்லியனாக காணப்படுகிறது.

மேலும், மக்காச்சோளத்திற்கு மாற்றாக கோழிப்பண்ணை தொடர்பான பொருட்களுக்கான 120,000 மெட்ரிக் தொன் கோதுமை கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *