முட்டை அதிக விலைக்கு விற்றால் அபராதம் 1 லட்சம்

முட்டை விலையை நிர்ணய விலை வரம்புகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவிக்கையில்,

முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதம் 5 இலட்சம் ரூபாவும் விதிக்கப்படும்.

அத்தோடு ஒரு நிறுவனத்துக்கு குறைந்தபட்ச அபராதம் 5 லட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதமாக 50 லட்சம் ரூபாவும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றார்.

Leave a Reply