
பெற்றோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் உள்ளிட்ட பிற பெற்றோலியப் பொருட்களில் இருந்து தொடர்ந்து
இலாபம் ஈட்டுவதால், மண்ணெண்ணெய்க்கு தொடர்ந்து மானியம் வழங்குவது ஒரு பிரச்சனையல்ல என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இதன்படி மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது சிறையில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை இனியும் தடுத்து வைக்க வேண்டாம் எனவும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிற செய்திகள்




