முல்லைத்தீவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாசாலையின் ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் இரண்டு வயதுச் சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மல்லாவி ஆதார வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply