சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்யும் முகமாக சேதன பசளை ஊடாக விவசாய செய்கையை மன்னார் விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர்.
அதனடிப்படையில், மன்னார் மாந்தை மேற்கு, நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய செய்கைக்கான உழுதல் மற்றும் விதைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற போதிலும், விவசாயிகள் சேதன பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.







