QR எரிபொருள் விநியோகத்தால் 270 மில்லியன் டொலர் சேமிப்பு

கொழும்பு, ஓக 22

QR அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வலுசக்தி அமைச்சு, QR குறியீட்டு அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறைமையின் கீழ் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றமை அரசுக்கு பெரும் சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுசக்தி அமைச்சின் கூற்றுப்படி, இதுவரை 6 மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள 93% எரிபொருள் நிலையங்கள் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமையை செயல்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *