இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது.
நாட்டில் மேலும் 23 பேர் நேற்று உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,995 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 549,500 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.






