இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.
அத்துடன் இன்றுமுதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது எனவும் அறிவித்துள்ளது.
‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான நெல்சன் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்குகின்றார்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது.
‘22.8.22 ’ என்ற கப்சனுடன் -சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டது.
இந்த நிலையில் தற்போது வயதான தோற்றத்தில் ரஜினிகாந்த் நிற்பது போன்ற ‘ஜெயிலர்’ போஸ்டர் ஒன்றை இன்று சன் பிக்சர் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் இந்தப் போஸ்டரை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.