முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வயோதிப தந்தை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
75 வயதுடைய பாலன் பழனியாண்டி என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த வயோதிபருக்கு கை, கால்களில் எரிவு நோய் ஏற்பட்டு, அதன் தாக்கத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட நிலையில், இவ்வாறானதொரு முடிவு எடுத்திருக்கலாம் என கிராம வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.






