திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களது 25வது ஆண்டு நினைவு மலர் வெளியீடு!

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களது 25வது ஆண்டு நினைவை முன்னிட்டு அன்னாரது திருவுருவச்சிலை திறப்புவிழாவும், நினைவு மலர் வெளியீடும் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தி/மூ/கிளிவெட்டி மகாவித்தியாலய தங்கத்துரை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தந்தை செல்வா என போற்றப்படுகின்ற சாமுவேல் செல்வநாயகம் அவர்களின் மைந்தனும், சட்டத்தரணியுமான சந்திரகாசன் உட்பட அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மூதூர் – கிளிவெட்டி எனும் கிராமத்தில் இருந்து 34 வயது இளைஞனாக இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவான அமரர் தங்கத்துரை 1970ம் ஆண்டு தொடக்கம் 1997ம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தடவைகளும் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தனது அரசியல் காலத்தில் இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி வேலைவாய்ப்புகள் மற்றும் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்து மூவின மக்களினுடைய ஆதரவினையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

பிற செய்திகள்

Leave a Reply