ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்! ஜோசப் ஸ்டாலின்

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிபந்தனையுடன் 2022 ஜனவரி 20 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண இன்று நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டத்தில் பேசியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பட்ஜெட்டில் 30 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்ததை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல், படிவங்களை நிரப்புதல் மற்றும் அவர்களின் கற்பித்தல் பொறுப்புகளுக்கு அப்பாற்பட்ட பிற வேலைகளில் இருந்து ஆசிரியர்கள் தொடர்ந்து விலகி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

32ஆவது ‘கார்த்திகை வீரர்கள் தினம்’ யாழில் அனுஸ்டிப்பு!

Leave a Reply