கொழும்பு, மடபாத பொல்ஹேன பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த இருவர், பொல்ஹேன சந்திக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் வலது கை, மணிக்கட்டுக்கு அருகில் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு கால்களிலும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 வயதுடைய நபர் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்! ஜோசப் ஸ்டாலின்






