திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி – அபயபுர பிரதான வீதியில் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை மூன்றாம் கட்டை, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவரே காயமடைந்துள்ளார்.
நிலாவெளியில் இருந்து மார்பிள் பீச் செல்வதற்காகக் கண்டி, அலவத்துக்கொட பிரதேசத்திலிருந்து சுற்றுலா வந்த இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்தவர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







