அரச ஊழியர்களை இழிவுபடுத்தும் அரசாங்கம்! எதிர்கட்சித் தலைவர் கண்டனம்

அரச ஊழியர்களை இழிவுபடுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரச சேவையானது நாடு தாங்க முடியாத அளவிற்கு பரந்து விரிந்துள்ளதாகவும், அது நாட்டுக்கு சுமை எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நம்புவதாகவும், அரச ஊழியர்கள் அவமதிக்கப்பட்டதை கண்டிப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த நாட்டில் அரச சேவையை கலைப்பதற்கு அரசாங்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தயாராகி வருவது இந்த கருத்து மூலம் தெளிவாவதாக.

தேர்தல் காலத்தில் பீடத்தில் வைத்து முடிசூட்டப்படும் அரச ஊழியர்களை தங்கள் நோக்கங்களை அடைந்த பிறகு பலிபீடத்தில் ஏற்றும் இந்த நன்றிகெட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமக்கு ஆச்சரியமலிக்கவில்லை.

கொரானா உள்ளிட்ட பேரிடர் காலத்தில் அரச ஊழியர்கள் பாராட்டத்தக்க மற்றும் மறுக்க முடியாத தலையீட்டை செய்த கடமைகளை பேரிடர் முடிவதற்குள் அரசாங்கம் மறந்துவிட்டது. இவர்களை நாட்டுக்கு சுமையாகக் கருதுவதில் அரசாங்கத்தின் சந்தர்ப்பவாதம் வெளிப்படுகின்றது.

இன்று பொது நிர்வாகத்தின் தலைவர்கள் மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு, போக்குவரத்து, தபால், சமுர்த்தி, கிராம உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதாரம், நுகர்வோர் சேவைகள் மற்றும் பல துறைகளில் அரச ஊழியர்களாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இதனை முழு நாட்டு மக்களும் அறிவர்.

இவை எதனையும் பொருட்படுத்தாமல், தனது சொந்த அரச ஊழியர்களை வெட்கமற்ற அரசாங்கம் நிந்திக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.

இலங்கை வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு பாதுகாப்பு அவசியம்! வடக்கு ஆளுநர்

Leave a Reply